கொலை வழக்கில் இளைஞருக்கு தூக்கு தண்டனை சொந்த சித்தி மகளை கொடூரமாக தாக்கி கொன்றதாக வழக்கு..!

புதுக்கோட்டையில் நகைக்காக சொந்த சித்தி மகளை கொடூரமாக தாக்கி கொலை செய்த அண்ணனுக்கு தூக்கு தண்டனை விதித்து, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Pdk murder judgement
Pdk murder judgement
Published on: 

புதுக்கோட்டையில் நகைக்காக சொந்த சித்தி மகளை கொடூரமாக தாக்கி கொலை செய்த அண்ணனுக்கு தூக்கு தண்டனை விதித்து, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பெருந்துறை கிராமத்தை சேர்ந்த லட்சுமணன், கடந்த 2021-ம் ஆண்டு புதுக்கோட்டை பொன் நகரில் வசித்து வந்த சொந்த சித்தி மகளான லோகப்பிரியாவை கத்தியால் குத்தியும், இரும்பு ராடால் தாக்கியும் கொலை செய்தார்.

ஒன்னேகால் சவரன் நகைக்காக, கொடூரமாக தாக்கி கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது இந்த வழக்கை விசாரித்த புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சந்திரன், லட்சுமணனுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

newstamil.tv