மதுபோதை, பாலியல் சீண்டல், Repeat? அரசு அதிகாரியின் தொடர் அத்துமீறல்

இளம்பெண்ணிடம் வேளாண் துறை உதவி இயக்குநர் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
abuse
abuse
Published on: 

தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரத்தில் விளைநிலங்களை கணக்கிடும் பணிகளுக்காக வந்த இளம்பெண்ணிடம் வேளாண் துறை உதவி இயக்குநர் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு ஆளாகியிருக்கும் அதே நபர் தான், கடந்த சில மாதங்களுக்கு முன் அலுவலகத்துக்கு மதுபோதையில் வந்து அட்ராசிட்டி செய்ததும் தெரிய வந்துள்ளது.
பயிர் கணக்கீடு செய்ய வந்த பெண்ணையே, கணக்கு பண்ண பார்த்த போதை ஆஃபிசர். இத்தனை நாட்களாக போதையில் வந்த புகாரில் மட்டுமே சிக்கிய இந்த ஆசாமி, இப்போது பாலியல் புகாரில் சிக்கியிருப்பது தான் ஹைலைட்டே.
தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் வட்டத்தில் வேளாண்மை துறை உதவி இயக்குநாராக இருந்தவர் தான் அறிவழகன். கடந்த மாதம் தான் பணியில் சேர்ந்த நிலையில், பலான வேலையில் ஈடுபட்டு சஸ்பெண்ட் ஆகியிருப்பது சக ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. ஏற்கனவே போதையில் அலுவலகத்துக்கு வந்து அட்ராசிட்டி செய்த புகாரில் தான் இந்த அறிவழகன், தென்காசியிலிருந்து ஒட்டபிடாரத்துக்கு தூக்கி அடிக்கப்பட்டார் என அரசுத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
பட்டப்பகலில் தள்ளாடும் போதையில் அரசு அலுவலகத்துக்கு வருவதோடு அங்கேயே படுத்து புரளும் வீடியோ எல்லாம் வெளியாகி சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு ஆளான அறிவழகன், மீண்டும் பணிக்கு சேர்ந்த ஒரு மாதத்திலேயே சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு ஆளாகியிருக்கிறார்.
ஒட்டப்பிடாரத்தில், பணிக்கு சேர்ந்த அறிவழகன், அளவோடு மது அருந்திவிட்டு கமுக்கமாக தன் இருக்கையில் அமர்ந்து வேலை செய்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தான், கடந்த வியாழனன்று தனக்கு கீழ் பணிபுரியும் பயிர் அறுவடை கணக்கெடுப்பு பணியாளரான இளம்பெண் ஒருவரிடம் சைட் விசிட்டிற்கு சென்றிருக்கிறார் அறிவழகன். தனக்காக ஒதுக்கபட்ட காரில் டிரைவருடன் சென்ற நிலையில், மீட்டிங் ஒன்று உள்ளது நீ காரிலிருந்து இறங்கு என டிரைவரை கீழே இறக்கிவிட்டுள்ளார் அறிவழகன்.
சுற்றிலும் காப்புக்காடாய் ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் லேண்ட் விசிட் செய்ய போவதாக சொல்லிவிட்டு, உடன்வந்த இளம்பெண்ணை கையை பிடித்து இழுத்தும் அநாகரிகமாக நடந்துகொண்டும் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக சொல்லப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், கூச்சலிட்டபடி தப்பியோடிய நிலையில் மாவட்ட ஆட்சியரகத்துக்கும் செல்போனில் புகாரளித்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், புகாருக்குள்ளான அறிவழகனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இதையடுத்து பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அறிவழகனை தொடர்பு கொண்டு புகார் பற்றி கேட்ட போது, அதற்கு மறுப்போ வருத்தமோ தெரிவிக்காமல் தெனாவட்டாக பேசியுள்ளார்.
மதுபோதையில் போட்ட ஆட்டத்தினால், ஏற்கனவே துறை ரீதியான நடவடிக்கைக்கு ஆளான போதும் திருந்தாமல், மீண்டும் இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு அதே நபர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், அரசு இன்னமும் கடுமையான நடவடிக்கையை எடுத்தே ஆகவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதையும் பாருங்கள் - Bumble டேட்டிங் ஆப் மீட் பண்ணலாமா? இளம்பெண்ணிடம் நகை, பணம் அபேஸ், DSP-யின் மகன் தில்லாலங்கடி வேலை

newstamil.tv