Mdy wall auto damaged
மாவட்ட செய்திகள்
அரசு பள்ளியில் பழைய கட்டடத்தை இடித்த போது விபத்து
மாநகராட்சியின் மூலதன நிதியில் இருந்து 3 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் 8 வகுப்பறைகள் கட்டும் பணிகள்
சென்னை மதுரவாயலில் அரசு பள்ளியில் பழைய கட்டடத்தை இடித்த போது, ஏற்பட்ட அதிர்வால் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கியது. கடந்த மாதம் புதிதாக வாங்கப்பட்ட ஆட்டோ சேதமடைந்ததால், வாழ்வாதாரத்தை இழந்து விட்டதாக ஆட்டோ ஓட்டுநர் வேதனை அடைந்தார், மதுரவாயல் எம்எம்டிஏ காலனி பகுதியில் இயங்கி வரும் சென்னை நடுநிலைப்பள்ளியில், மாநகராட்சியின் மூலதன நிதியில் இருந்து 3 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் 8 வகுப்பறைகள் கட்டும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
