அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு.. பாலியல் வழக்கில் ஞானசேகரன் கைது

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் மே 28 ஆம் தேதி சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
27
27
Published on: 

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் மே 28 ஆம் தேதி சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் அண்ணா பல்கலை வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

தமிழகம் முழுவதும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் மூன்று பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் அடங்கிய, சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரித்து, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.

இதனையடுத்து இந்த வழக்கில் வரும் 28 ஆம் தேதி சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstamil.tv