CHN ATTACK NEWS
CHN ATTACK NEWS

புழல் காவல்நிலையத்தில் பெண் காவல் ஆய்வாளர் மீது தாக்குதல்

விசாரணையின் போது, கணவரை அப்பெண் தகாத வார்த்தைகளால் திட்டியதால் பெண் காவல் ஆய்வாளர் பிரதீபா எச்சரித்துள்ளார்.
Published on: 

சென்னை புழல் மகளிர் காவல் நிலையத்தில் கணவன் - மனைவி குடும்ப பிரச்சனையை விசாரித்த பெண் காவல் ஆய்வாளரை புகார் அளித்த பெண்ணும் அவரது தாயாரும் சேர்ந்து தாக்கியதில் மயக்கமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

வடபழனி சாலிகிராமம் பகுதியை சேர்ந்த யுவஸ்ரீ என்ற பெண் தனது கணவர் வருண் கொலை மிரட்டல் விடுப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையின் போது, கணவரை அப்பெண் தகாத வார்த்தைகளால் திட்டியதால் பெண் காவல் ஆய்வாளர் பிரதீபா எச்சரித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அப்பெண், தனது தாயாருடன் சேர்ந்து காவல் ஆய்வாளரை தாக்கியதில் அவர் மயக்கமடைந்தார்.

newstamil.tv