OSUR Arrest
OSUR Arrest

பாஜக மாநில மகளிர் அணி துணை தலைவி கைது

சைபர் கிரைம் போலீசார், ஒசூர் நகர போலீசார் உதவியுடன் மதிவதனகிரி தங்கி இருந்த வீட்டை சுற்றிவளைத்து கைது செய்தனர்.
Published on: 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் தங்கியிருந்த பாஜக மாநில மகளிர் அணி துணை தலைவியை, மோசடி புகாரில் சென்னை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். டிரேடிங் தொழில் செய்து வந்த பாஜக மகளிர் அணி துணை தலைவி மதிவதனகிரி, 4.5 கோடி முதலீடு பெற்று மோசடி செய்ததாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து மதிவதனகிரி தலைமறைவாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் ஒசூரில் தங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து விரைந்து வந்த சைபர் கிரைம் போலீசார், ஒசூர் நகர போலீசார் உதவியுடன் மதிவதனகிரி தங்கி இருந்த வீட்டை சுற்றிவளைத்து கைது செய்தனர்.

newstamil.tv