6
மாவட்ட செய்திகள்
கார் கண்ணாடியை உடைத்து, சுற்றுலா பயணி மீது தாக்குதல்... கடை உரிமையாளர் உட்பட 3 பேரை கைது செய்த போலீஸார்
கொடைக்கானலில் தனது கடைக்கு முன்பு காரை நிறுத்தி விட்டு வேறு கடையில் பொருட்கள் வாங்கியதால் ஆத்திரத்தில் சுற்றுலாப் பயணியின் காரை தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொடைக்கானலில் தனது கடைக்கு முன்பு காரை நிறுத்தி விட்டு வேறு கடையில் பொருட்கள் வாங்கியதால் ஆத்திரத்தில் சுற்றுலாப் பயணியின் காரை தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சியைச் சேர்ந்த மனோஜ் சித்தார்த், தனது மனைவி மற்றும் குழந்தையுடன் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பியுள்ளார்.
அப்போது, பெருமாள்மலை பகுதியில் சாக்லேட் கடை முன்பு காரை நிறுத்திவிட்டு, அருகிலுள்ள பழக்கடைக்கு சென்று பழம் வாங்கியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சாக்லேட் கடை உரிமையாளர் அயூப்கான் மற்றும் சிவா, ராகுல் ஆகியோர் சேர்ந்து கார் கண்ணாடி, சைடு மிரர் ஆகியவற்றை உடைத்ததோடு, மனோஜையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

