பிஎஸ்என்எல் டவர் சாய்ந்து விழுந்து வீடுகள் சேதம்... வீட்டின் மொட்டை மாடியில் பொருத்தப்பட்டிருந்த டவர்

சென்னை புரசைவாக்கத்தில் வீட்டின் மொட்டை மாடியில் பொருத்தப்பட்டிருந்த பிஎஸ்என்எல் டவர் மழை காரணமாக சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
New Project - 2025-05-28T205359
New Project - 2025-05-28T205359
Published on: 

சென்னை புரசைவாக்கத்தில் வீட்டின் மொட்டை மாடியில் பொருத்தப்பட்டிருந்த பிஎஸ்என்எல் டவர் மழை காரணமாக சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

புரசைவாக்கம் பகுதியில் நேற்று மழை பெய்த நிலையில், கங்காதீஸ்வரர் கோவில் அவென்யூ பகுதியில் சுரேஷ் என்பவர் வீட்டின் மொட்டை மாடியில் பொருத்தப்பட்டிருந்த பிஎஸ்என்எல் டவர் சரிந்து விழுந்தது.

பக்கத்து வீடுகளின் மீதும் டவர் சாய்ந்து விழுந்ததில் கட்டடங்கள் சேதமடைந்தன. இதுகுறித்த புகாரின் பேரில் வேப்பேரி போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

newstamil.tv