கடலூர் அருகே பலாப்பழ மதிப்பு கூட்டு மையம் கட்ட தடை.. சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு

கடலூர் அருகே, 200 ஆண்டுகள் பழமையான விளையாட்டு திடலை, பலாப்பழ மதிப்பு கூட்டு மையமாக மாற்றுவதற்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
42
42
Published on: 

கடலூர் அருகே, 200 ஆண்டுகள் பழமையான விளையாட்டு திடலை, பலாப்பழ மதிப்பு கூட்டு மையமாக மாற்றுவதற்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பட்டீஸ்வரம் கிராமத்தில் உள்ள மலை திடல் என அழைக்கப்படும் அந்த விளையாட்டு திடலை, பள்ளி மாணவ- மாணவிகள் பயன்படுத்தி வரும் நிலையில், மக்களிடம் எந்தவித கருத்தும் கேட்காமல், அங்கு பலாப்பழ மதிப்பு கூட்டு மையம் கட்டுவதற்கான அனுமதியை மாவட்ட ஆட்சியர் வழங்கியிருப்பதாக கூறி, ஜி.ராஜலிங்கம் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

பொது நலனுக்காக பலாப்பழ மதிப்பு கூட்டு மையம் கட்டுவதாக இருந்தால், தமக்கு சொந்தமான நிலத்தை இலவசமாக வழங்க தயாராக உள்ளதாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.

newstamil.tv