DGL
மாவட்ட செய்திகள்
ஜல்லிக்கட்டுக்காக முழுவீச்சில் தயாராகும் காளைகள்
ஊட்டச்சத்து மிக்க உணவுகளும் வழங்கப்படுகின்றன. இதே போல் மாடுபிடி வீரர்களும் கபடி போன்ற விளையாட்டுகளில் ஈடுபட்டு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால், திண்டுக்கல் மாவட்டம் பில்லமநாயக்கன்பட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. காளைகளுக்கு கால்கள் மற்றும் உடல் வலுவடைய காலை, மாலை இரு வேளையும் நடை பயிற்சி, கொம்புத்திறன் வலுப்பெற மண் குத்து பயிற்சி, நீண்ட நேரம் வாடியில் விளையாட நீச்சல் பயிற்சி, காளையர்களிடம் சிக்காமல் இருக்க வாடிவாசல் பயிற்சி அளிக்கப்படுகிறது. பேரிச்சம்பழம், பருத்தி விதை, புண்ணாக்கு, பசுந்தீவனம், கடலை மிட்டாய் போன்ற ஊட்டச்சத்து மிக்க உணவுகளும் வழங்கப்படுகின்றன. இதே போல் மாடுபிடி வீரர்களும் கபடி போன்ற விளையாட்டுகளில் ஈடுபட்டு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

