CDL Accident
மாவட்ட செய்திகள்
வேப்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து விபத்து
விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பேருந்து விபத்து :
சென்னையிலிருந்து காரைக்குடி நோக்கி சென்ற தனியார்பேருந்து திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் ரேணுகாவிஜயன் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பேருந்தை ஓட்டியவர் கதிர்வேல் (25 வயதுக்கு மேற்பட்டவர்) என தெரியவந்துள்ளது.

