16
16

சூலப்புரம் கிராமத்திற்கு முதல் முறையாக பேருந்து.. உறுமி மேளம், நாட்டுப்புற நடனத்துடன் வரவேற்ற மக்கள்

தேனி மாவட்டம் சூலப்புரம் கிராமத்திற்கு முதல்முறையாக பேருந்து வசதி தொடங்கப்பட்ட நிலையில், கிராம மக்கள் உறுமி மேளம் அடித்தும், நாட்டுப்புற நடனமாடியும் உற்சாக வரவேற்பளித்தனர்.
Published on: 

தேனி மாவட்டம் சூலப்புரம் கிராமத்திற்கு முதல்முறையாக பேருந்து வசதி தொடங்கப்பட்ட நிலையில், கிராம மக்கள் உறுமி மேளம் அடித்தும், நாட்டுப்புற நடனமாடியும் உற்சாக வரவேற்பளித்தனர்.

போடிநாயக்கனூரில் இருந்து 9 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள சூலப்புரம் கிராமத்திற்கு பேருந்து வசதி இல்லாததால் பள்ளி,

கல்லூரி மாணவர்களும், பொதுமக்களும் சிலமலை கிராமம் வரை 2 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று அங்கிருந்து பிற பகுதிகளுக்கு சென்று வந்தனர்.

இந்நிலையில் கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று காலை, மாலை என 2 வேளை பேருந்து வசதி தொடங்கப்பட்டுள்ளது.

முதல் நாளிலேயே காலை 8:30 மணிக்கு வரவேண்டிய பேருந்து 8:55 மணிக்கு வந்ததால் மாணவ மாணவிகள் பதட்டத்திற்கு உள்ளாகினர்.

newstamil.tv