சென்னையை அதிரவைத்த அர்னாப், சாலைக்கு வந்த கடல்நீர்

அர்னாப் புயல் கரையை கடந்த போது, சென்னையில் எண்ணூர் உள்ளிட்ட கடற்கரைகளில் பலத்த காற்றுடன் பேரலைகள் எழுந்தன. கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மீனவ குடும்பங்கள் கடும் அவதியடைந்தனர்.
சென்னையில்
Published on: 

அர்னாப் புயல்...

வங்கக்கடலில் உருவான அர்னாப் புயல் ஆந்திரப்பிரதேசம் கடற்கரையில் கரையை கடந்தது. இதன் காரணமாக கனமழையோடு கடல் சீற்றம் வழக்கத்திற்கும் மாறாக அதிகரித்து காணப்பட்டது. முன்னெச்சரிக்கையாக பொதுமக்கள் கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டதோடு, தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

சென்னையில் கடல் அலை
அர்னாப் புயல்நியூஸ்தமிழ்24x7

அர்னாப் புயல் கரையை கடக்க தொடங்கியதும், சென்னை எண்ணூர் கடற்கரையில் கடல் அலைகள் வழக்கத்திற்கு மாறாக உயரமாக எழுந்தன. இந்த கடல் சீற்றம் காரணமாக, சாலையில் தண்ணீர் புகுந்து, வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன.

பொதுமக்களுக்கு எச்சரிக்கை

விரைந்து வந்த போலீசார் மற்றும் ரோந்து பணியில் இருந்த போக்குவரத்து காவலர்கள் பொதுமக்களை வெளியேற்றியதோடு, அவ்வழியாக வாகனங்கள் செல்ல தடை விதித்தனர். மேலும் ராட்சத அலைக்கு மத்தியில் ரீல்ஸ் வீடியோ எடுத்த பொதுமக்களை எச்சரித்து அனுப்பினர்.

கடற்கரையில் ஏற்பட்ட ராட்சத அலை காரணமாக, குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இந்நிலையில், கடந்த 1990ஆம் ஆண்டில் இருந்து புயல் காலத்தில் இது போன்ற பிரச்சனைகளை சந்தித்து வருவதாகவும், இதற்கு தீர்வு காண தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் எனவும் அரசுக்கு மீனவ கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடல் சீற்றம்
கடல் அலை நியூஸ்தமிழ்24x7

தூண்டில் வளைவு வருமா?

கடந்த காலத்தில் இருந்த அரசுகள் தூண்டில் வளைவுக்கு பதிலாக பாறைகளை குவித்ததாகவும், தூண்டில் வளைவு அமைத்தால் மட்டுமே இது போன்ற இயற்கை சீற்றங்களில் இருந்து தாங்கள் பாதுகாப்பாக இருக்க முடியும் எனவும் எண்ணூர் மக்கள் கூறினர்.

ஆபத்தை உணராமல்...

அர்னாப் புயல் காரணமாக, சென்னை கிழக்குக் கடற்கரைப் பகுதிகளான பாலவாக்கம், நீலாங்கரை, அக்கரை கடற்கரைகளில் கடல் சீற்றம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் கடற்கரையில் இருந்து பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதியில் சீற்றத்துடன் கடல் உள்வாங்கிய நிலையில், ஆபத்தை உணராமல் பொதுமக்கள் கடற்கரையில் சுற்றித்திரிந்தனர்.

சென்னையில்
கரையை கடந்த அர்னாப் - இப்போது என்ன நிலை?
newstamil.tv