

கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு காலமானார்; 72 நாட்கள் தீவிர சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிர் பிரிந்தது.
கொளத்தூர் தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ
70 நாள்களுக்கு மேலாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உயிர் பிரிந்தது. 70 நாட்களுக்கும் மேலாக நுரையீரல் தொற்றுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
மருத்துவமனை அறிவிப்பு
இன்று மதியம் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிர் பிரிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது
முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி
கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு உடலுக்கு முதலமைச்சர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். மருத்துவமனைக்கே சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோர் வி.எஸ்.பாபு உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். அமைந்தகரை தனியார் மருத்துவமனைக்கு நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினர்.
நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் வி.எஸ்.பாபு. பல்துறை நிபுணர்கள் சிகிச்சை அளித்தும் பலனளிக்கவில்லை. நீண்ட சுவாச பாதிப்பு காரணமாக செப்டம்பர் 9ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட V.S.பாபு
தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் உடல்நிலை தொடா்ந்து மோசமாகி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இன்று பிற்பகல் 2.24 மணியளவில் உயிா் பிாிந்ததாக MGM மருத்துவமனை நிா்வாகம் அறிவித்தது.
தமிழக ஆளுநர் இரங்கல்
வி.எஸ்.பாபு மறைவிற்கு தமிழக ஆளுநர் அர்லேகர் இரங்கல் தெரிவித்துள்ளார். வி.எஸ்.பாபுவின் குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் அனுதாபமும் கூறி உள்ளார்.
ஆதவ் அர்ஜூனா புகழாரம்
வடசென்னையின் முகமாக இருந்தவர் வி.எஸ்.பாபு என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா புகழாரம் சூட்டினார். கடினமான காலகட்டத்தில் முதலமைச்சர் விஜயுடன் இணைந்து பணியாற்றியதாகவும் உருக்கம் தெரிவித்தார். கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை 8795 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி கண்டவர் வி.எஸ்.பாபு. தி.மு.க.வில் இருந்து த.வெக.வில் இணைந்து தேர்தலில் தாய் கழகத்திற்கே அதிர்ச்சி வைத்தியம் அளித்தவர்.
இதுதொடர்பாக, முதல்வரும் தவெக தலைவருமான விஜய் கூறி இருப்பதாவது;
V.S.பாபு உடல் நலக்குறைவால் மறைந்த செய்தி அறிந்து ஆழ்ந்த வேதனையும், துயரமும் அடைந்தேன். அனைவரின் அன்பு, ஆதரவு, நம்பிக்கையை பெற்றிருந்த V.S.பாபுவின் திடீர் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. பொதுவாழ்வில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு, மக்களோடு மக்களாகப் பழகியவா் வி.எஸ்.பாபு.
VS பாபுவின் பிரிவால் துயரத்தில் ஆழ்ந்துள்ள குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தவெகவினருக்கு ஆழ்ந்த இரங்கல்
இவ்வாறு முதலமைச்சர் விஜய் கூறி உள்ளார்.
”அதிர்ச்சி அளிக்கிறது”
கொளத்தூா் தொகுதி எம்எல்ஏ வி.எஸ்.பாபு மறைவுச் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
V.S.பாபு உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், திடீரென வெளியாகி உள்ள அவரது மறைவுச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது என்றும், அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் என்றும்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.