

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே இடையஞ்சாவடி கிராமத்தில் ஸ்ரீவர்ணமுத்து மாரியம்மன் கோவிலில், தீமிதி திருவிழாவை முன்னிட்டு 90ஆம் ஆண்டு மிளகாய்பொடி கரைசல் அபிஷேகம் நடைபெற்றது.
அப்பகுதியைச் சேர்ந்த மூவர் அம்மனாக தேர்வு செய்யப்பட்டு, மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், பன்னீர், பஞ்சாமிர்தம், பழவகைகள் உள்ளிட்டவற்றைக் கொண்டு 108 சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இறுதியாக மிளகாய் பொடி கரைசல் ஊற்றப்பட்டு அபிஷேகம் நடைபெற்றது. அம்மனாக வீற்றிருந்த மூவரும் மிளகாய் பொடி கரைசலை சர்வ சாதாரணமாக குடித்தது பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது.