அடகு வைத்த நகையை திருப்பி தராமல் ஏமாற்றுவதாக புகார்

12 சவரன் நகையை கொடுத்த முத்தூட் நிறுவனம் மீதமுள்ள 6 சவரன் நகையை தராமல் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக இழுத்தடிப்பாக குற்றச்சாட்டு
Theni muthoot fincorp
Theni muthoot fincorp
Published on: 

தேனி மாவட்டம் தேவாரம் பகுதியில் உள்ள முத்தூட் பைனான்ஸில் அடகு வைக்கப்பட்ட நகையில் பாதி நகையை கொடுத்து விட்டு மீதமுள்ள நகையை திருப்பி தரமால் ஏமாற்றுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான நகை உரிமையாளர் மற்றும் அவரது உறவினர்கள் அந் நிறுவனத்திற்குள் தர்ணாவில் ஈடுபட்டனர். செல்லப்பாண்டி என்பவர் 2023 ம் ஆண்டு 18 சவரன் நகை நகை அடகு வைத்து பணம் பெற்றதாக கூறப்படுகிறது. நகைக்கான பணம் செலுத்தி மீட்டபோது 12 சவரன் நகையை கொடுத்த முத்தூட் நிறுவனம் மீதமுள்ள 6 சவரன் நகையை தராமல் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக இழுத்தடிப்பாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

newstamil.tv