EV Bike issue
EV Bike issue

எலக்ட்ரிக் பைக் தொடர்ந்து பழுதாவது குறித்து தம்பதி கேள்வி

புதிதாக வாங்கிய எலக்ட்ரிக் பைக் தொடர்ந்து பழுதாவது குறித்து கேள்வி எழுப்பிய தம்பதியை கடுமையாக தாக்கிய கடை உரிமையாளர்
Published on: 

சென்னை மதுரவாயிலில் புதிதாக வாங்கிய எலக்ட்ரிக் பைக் தொடர்ந்து பழுதாவது குறித்து கேள்வி எழுப்பிய தம்பதியை கடுமையாக தாக்கிய கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார். போரூர் பாலமுருகன் நகரை சேர்ந்த அருண், காரம்பாக்கம் அருகே உள்ள மாகனு எலக்ட்ரிக் பைக் கடையில் வாங்கிய தனது எலக்ட்ரிக் பைக் பழுதானதை தொடர்ந்து அதனை சரி செய்ய கடையில் விட்டார். அப்போது பேட்டரி பழுதாகி விட்டது, அதனை மாற்றி தரமுடியாது என கடை உரிமையாளர் கணேஷ் கூறியதாக தெரிகிறது. அதிர்ச்சியடைந்த அருண் பேட்டரிக்கு 3 ஆண்டுகள் உத்தரவாதம் இருப்பது குறித்து கேள்வி எழுப்பியதால் ஆத்திரமடைந்த கணேஷ், அருண் மற்றும் அவரது மனைவியை தாக்கியதில் இருவரும் காயமடைந்தனர்.

newstamil.tv