Tut issue
மாவட்ட செய்திகள்
வெள்ளநீர் கால்வாய் பணிகள் நிறைவடையும் முன்பே சேதம்
75 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிதாக வெள்ளநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
சாத்தான்குளம் அருகே வெள்ளநீர் கால்வாய் திட்ட பணிகள் முழுமையாக நிறைவடைவதற்குள்ளாகவே, மழையால் கரைகள் அரிக்கப்பட்டு சேதமடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாமிரபரணி, நம்பியாறு, கருமேனியாறு ஆகிய மூன்று நதிகளையும் இணைத்து, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் 75 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிதாக வெள்ளநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. அதில் தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் பணிகள் 90 சதவீதம் அளவுக்கு நிறைவடைந்துள்ளது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, சாலைப்புதூர் பகுதியில் அமைக்கப்பட்ட குளத்தின் கரை, ஒரு மழைக்கு கூட தாங்காமல் சேதமடைந்துள்ளது.
