53
53

திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்..

வாரவிடுமுறையை ஒட்டி திருச்செந்தூர் முருகன் கோயிலில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
Published on: 

வாரவிடுமுறையை ஒட்டி திருச்செந்தூர் முருகன் கோயிலில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

அதிகாலை நான்கு மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு உதய மார்த்தாண்ட அபிஷேகம் மற்றும் கால பூஜைகள் நடைபெற்ற நிலையில், கோயிலுக்கு வரத்தொடங்கிய பக்தர்கள் கடல் மற்றும் நாழி கிணற்றில் புனித நீராடி சுமார் 6 மணி நேரம் காத்திருந்து வழிபாடு செய்தனர்.

தற்போது வள்ளிக்குகையை வழிபாடு செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு அங்கும் ஏராளமான பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்தனர்.

newstamil.tv