CGL Bar close
மாவட்ட செய்திகள்
காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறுவது தொடர்பாக தகராறு
ஆத்திரமடைந்த டாஸ்மாக் விற்பனையாளர், விற்பனையைப் பாதியிலேயே நிறுத்தி விட்டு, கடையைப் பூட்டிவிட்டு அங்கிருந்து வெளியேறினார்.
சென்னை வேளச்சேரி - மேடவாக்கம் பிரதான சாலை பள்ளிக்கரணையில் இயங்கி வரும் டாஸ்மாக் கடை, காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறுவது தொடர்பான பிரச்சனை காரணமாக திடீரென மூடப்பட்டதால், மதுபிரியர்கள் ஏமாற்றமடைந்தனர். காலி பாட்டில்களை யார் சேகரிப்பது?, யார் பணத்தை கையாளுவது? என்பது தொடர்பாக டாஸ்மாக் விற்பனையாளருக்கும், பார் ஊழியர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றி மோதலாக மாறியதால், ஆத்திரமடைந்த டாஸ்மாக் விற்பனையாளர், விற்பனையைப் பாதியிலேயே நிறுத்தி விட்டு, கடையைப் பூட்டிவிட்டு அங்கிருந்து வெளியேறினார்.

