

மாநிலங்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேமுதிகவுக்கு ராஜ்ய சபா எம்பி சீட் உண்டா? இல்லையா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, பொறுமை கடலினும் பெரிது என பிரேமலதா விஜயகாந்த் பதிலளித்தார்.
சென்னை கோயம்பேட்டில் செய்தியாளர்களை சந்தித்தவர், தற்போது தான் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருப்பதாகவும், பொறுத்திருந்து பார்ப்பதாகவும் கூறினார்.
மேலும், வரும் சட்டமன்ற தேர்தல் நிலைப்பாடு தொடர்பாக, அடுத்தாண்டு ஜனவரி 7 தேதி கடலூரில் நடைபெறும் மாநாட்டில் அறிவிப்பதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.