3
மாவட்ட செய்திகள்
பள்ளிப்பாளையம் சிறுநீரகத் திருட்டு செய்தி எதிரொலி..
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் சிறுநீரக திருட்டு புகார் தொடர்பாக, சுகாதாரத் திட்ட இயக்குநர் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் சிறுநீரக திருட்டு புகார் தொடர்பாக, சுகாதாரத் திட்ட இயக்குநர் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநரான ஐஏஎஸ் அதிகாரி வினீத், தீர விசாரித்து 2 வாரத்தில் அரசுக்கு அறிக்கை அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சிறுநீரக திருட்டில் ஈடுபட்ட புகார் தொடர்பாக விசாரணை நடத்தியதில், 52 வயது மதிக்கத்தக்க நபர் இடைத்தரகராக செயல்பட்டது தெரியவந்ததாகவும், அவர் மீது பள்ளிப்பாளையம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
