

சென்னை ஆலந்தூரில் பள்ளியில் வேலை செய்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் உடலை, மருத்துவமனையில் இருந்து பள்ளிக்கு எடுத்து சென்றதால் மாணவர்கள் அலறியடித்து ஓட்டம்பிடித்தனர்.
அரசு உதவி பெறும் ஏ.ஜி.எஸ். நிதி மேல்நிலைப்பள்ளி ஆடிட்டோரியத்தில் பணிபுரிந்தபோது ஆலந்தூரை சேர்ந்த ஜார்ஜ் என்பவர் மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்து உயிரிழந்தார்.