SVG EB Detail
SVG EB Detail

மூதாட்டியின் ஓட்டு வீட்டுக்கு ரூ.6 ஆயிரம் மின் கட்டணம்

இவர்களுக்கு நவம்பர் மாத கட்டணமாக 5 ஆயிரத்து 967 ரூபாய் வந்துள்ளது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்
Published on: 

சிவகங்கை மாவட்டம் கீழடி அருகே ஓட்டு வீட்டில் வசிக்கும் முதிய தம்பதிக்கு 5 ஆயிரத்து 967 மின் கட்டணம் வந்துள்ளதால் அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சொட்டதட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் கோட்டைச்சாமி- முனியம்மாள் தம்பதி. கூலி தொழிலாளிகளான இவர்கள் இருவரும் வயது முதிர்வு காரணமாக கூலி வேலைக்கு செல்லாமல் அரசு வழங்கும் முதியோர் ஓய்வூதியத்தை வைத்து வாழ்ந்து வருகின்றனர். வீட்டில் 3 எல்இடி விளக்குகள், ஒரு மின் விசிறி மட்டும் பயன்படுத்தும் இவர்களுக்கு நவம்பர் மாத கட்டணமாக 5 ஆயிரத்து 967 ரூபாய் வந்துள்ளது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

newstamil.tv