TPR Fake ghee
மாவட்ட செய்திகள்
நந்தினி நிறுவனத்தின் பெயரில் போலியாக நெய்
'நந்தினி' என்ற பெயரில் நாடு முழுதும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே கர்நாடக அரசின் நிறுவனத்தின் பெயரில் போலியாக நெய் தயாரித்த ஆலைக்கு சீல் வைத்த பெங்களூரு தனிப்பிரிவு போலீசார் உரிமையாளர் உட்பட 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கர்நாடக அரசின் கே.எம்.எப். (( KMF )) எனப்படும், கர்நாடக கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பில் தயாரிக்கப்படும் பால் பொருட்கள், 'நந்தினி' என்ற பெயரில் நாடு முழுதும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் நந்தினி என்ற பெயரில் போலியாக நெய் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக வந்த ரகசிய தகவலின் பேரில் அதிகாரிகள் இந்த நடவடிக்கை மேற்கொண்டனர்.
