TDM Fake officer
TDM Fake officer

லாரிகளை வழிமறித்து போலி அதிகாரிகள் வசூல் வேட்டை

அவர்களை விசாரணை செய்ததில் ஈரோட்டை சேர்ந்த ஓட்டுநர் ராஜா மற்றும் கார்த்திகேயன் என்பது தெரிய வந்தது.
Published on: 

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே சிறப்பு அதிகாரிகள் என கூறி லாரிகளை வழிமறித்து வசூல் வேட்டையில் ஈடுபட்ட இரண்டு நபர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து BMW காரை பறிமுதல் செய்தனர். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பணம் வசூலித்து வந்த இருவர் மீது சந்தேகமடைந்த லாரி ஓட்டுநர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனைதொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரித்துக்கொண்டிருக்கையில், இருவரும் தப்பித்து ஓட முற்பட்ட நிலையில் மடக்கி பிடித்தனர். அவர்களை விசாரணை செய்ததில் ஈரோட்டை சேர்ந்த ஓட்டுநர் ராஜா மற்றும் கார்த்திகேயன் என்பது தெரிய வந்தது.

newstamil.tv