

நேரடி நெல் கொள்முதல் நிலையம் முன்பு, கண்டன ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர். தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா, விழித்தியூர் பகுதியில் அமைந்துள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் பணி நடைபெறாமல் இருந்து வருவதாகவும், 13 நாட்களாக நெல்லை கொட்டி வைத்து காத்துக் கிடக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர். இதனால், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில், விழுதியூர் அரசு நெல் கொள்முதல் நிலையம் முன்பு விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றவில்லை என்றால், நாளை காலை 10 மணி அளவில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என்றும் அறிவித்தனர்.