9
9

CPCL நிறுவன நுழைவு வாயிலை முற்றுகையிட்ட விவசாயிகள்.. மறுவாழ்வு, மீள் குடியமர்வு இழப்பீடு வழங்க வலியுறுத்தல்

CPCL நிர்வாகத்தை கண்டித்து, அந்நிறுவன நுழைவு வாயிலை முற்றுகையிட்டு விவசாயிகளும், விவசாய கூலி தொழிலாளர்களும் போராட்டம் நடத்தினர். நாகை மாவட்டம் பனங்குடியில் இயங்கி வரும் CPCL நிறுவன விரிவாக்க பணிக்காக நரிமணம், பனங்குடி, கோபுராஜபுரம், முட்டம் ஆகிய கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டது.
Published on: 

இதற்குரிய மறுவாழ்வு மற்றும் மீள்குடி அமர்வு இழப்பீட்டுத் தொகையை வழங்காமல் CPCL நிறுவனம் காலம் தாழ்த்தி வருவதை கண்டித்து போராட்டம் நடைபெற்றது.

இதையடுத்து, போலீஸாரும், வருவாய்த்துறையினரும் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் பணப் பலன்களை பெற்றுத் தருவதாக உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.

newstamil.tv