Hosue EB AE issue
Hosue EB AE issue

உதவி பொறியாளர் டார்ச்சர் செய்வதாக பெண் ஊழியர் புகார் உதவி பொறியாளர் செயலால் மன உளைச்சல் என வேதனை

இந்நிலையில் உதவி பொறியாளரான உள்ள சுரேந்திரன் தம்மை சக ஊழியர்கள் முன் ஆபாச வார்த்தைகளால் திட்டுவதாகவும், வருகை பதிவேட்டில் தாமதமாக வந்ததாக கையெழுத்து போட வேண்டும் என கட்டாயப்படுத்துவதால் மன உளைச்சலில் இருப்பதாக புகாரில் தெரிவித்துள்ளர்.
Published on: 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மின்வாரிய அலுவலகத்தில் உதவி பொறியாளர் தினமும் டார்ச்சர் செய்தவதாக பெண் ஊழியர் அளித்த புகாரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓசூர் காமராஜ் நகரை சேர்ந்தவர் சுதா என்பவர் மின்வாரிய அலுவலகத்தில் கணக்கீட்டாளராக 12 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் உதவி பொறியாளரான உள்ள சுரேந்திரன் தம்மை சக ஊழியர்கள் முன் ஆபாச வார்த்தைகளால் திட்டுவதாகவும், வருகை பதிவேட்டில் தாமதமாக வந்ததாக கையெழுத்து போட வேண்டும் என கட்டாயப்படுத்துவதால் மன உளைச்சலில் இருப்பதாக புகாரில் தெரிவித்துள்ளர்.

newstamil.tv