KNK Protest
KNK Protest

மீனவர் தினத்தை புறக்கணித்து மீனவ கிராம மக்கள் போராட்டம்

சைமன்காலணி மீன்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Published on: 

கடந்த வாரம் கேரளாவில் தமிழக மீனவர்களை தாக்கியவர்களை கைது செய்ய கோரி, கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே 5 மீனவ கிராம மக்கள் உலக மீனவர் தினத்தை புறக்கணித்து தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டனர். கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் கேரளா மாநிலம் கொல்லம், கொச்சி போன்ற துறைமுகங்களை தங்குதளமாக கொண்டு மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மீனவர்கள் தாக்கப்படுவது தொடர் கதையாகி வரும் நிலையில், தமிழக துறைமுகங்களில் படகுகளை நிறுத்த அனுமதிக்க கோரிக்கை விடுத்தனர். சைமன்காலணி மீன்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

newstamil.tv