SVG Protest
SVG Protest

கானாடுகாத்தான் பகுதியில் விமான பயிற்சி நிலையம்

கானாடுகாத்தான் பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பொற்கொடியிடம் மனு அளித்தனர்.
Published on: 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே விமான பயிற்சி நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு அளித்தனர். கானாடுகாத்தான் பகுதியில் கைவிடப்பட்ட விமான நிலையம் பகுதியில் விமான பயிற்சி நிலையம் அமைக்க தமிழ்நாடு அரசின் டிட்கோ நிறுவனம் சார்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது. இந்த நிலையில், விமான பயிற்சி நிலைய விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்துவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி, கானாடுகாத்தான் பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பொற்கொடியிடம் மனு அளித்தனர்.

newstamil.tv