CBE Sick elephant
மாவட்ட செய்திகள்
வனப்பகுதியில் இருந்து வெளியேறி மயங்கி விழுந்த தாய் யானை தாய் யானைக்கு வனக் கால்நடை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை..!
கோவை மருதமலை அடிவாரத்தில் கோடை வறட்சியின் காரணமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய தாய் யானை திடீரென மயங்கி விழுந்ததால், அதற்கு வனத்துறையினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

பாரதியார் பல்கலைக் கழகத்தின் மேற்குப் பகுதியில் குட்டியுடன் முகாமிட்டிருந்த தாய் யானை திடீரென மயங்கி விழுந்தது. குட்டி யானை தனது சிறிய தும்பிக்கையால் தவிப்புடன் எழுப்ப முயன்றும் தாய் எழுந்திருக்கவில்லை.
அதனை கண்காணித்து வந்த வனத்துறையினர் ஆனைமலை மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனக் கால்நடை மருத்துவர்கள் மூலம், கும்கி யானை துரியனின் உதவியுடன் சிகிச்சை அளித்து வருகின்றனர்.