Cuddalore
Cuddalore

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார்... முன்னாள் எம்.எல்.ஏ., சத்யா பன்னீர்செல்வம் வீட்டில் ரெய்டு

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் முன்னாள் எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வத்தின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சுமார் 17 மணி நேரம் சோதனை நடத்தினர்.
Published on: 

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் முன்னாள் எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வத்தின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சுமார் 17 மணி நேரம் சோதனை நடத்தினர்.

2016 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் எம்எல்ஏவாக இருந்த சத்யா பன்னீர்செல்வம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது.

அதன் அடிப்படையில் வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு சோதனையை தொடங்கி லஞ்ச ஒழிப்பு போலீசார் இரவு சுமார் 11 மணி அளவில் நிறைவு செய்தனர்.

சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstamil.tv