நகர்மன்ற முன்னாள் தலைவி உமா மகேஸ்வரி மீது வழக்குப்பதிவு... அரசு பணியை செய்யவிடாமல் தடுத்ததாகக் கூறி வழக்குப்பதிவு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகர்மன்ற முன்னாள் தலைவி உமா மகேஸ்வரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tenkasi
Tenkasi
Published on: 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகர்மன்ற முன்னாள் தலைவி உமா மகேஸ்வரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சங்கரன்கோவில் நகர மன்ற தலைவியாக இருந்த உமா மகேஸ்வரி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்ததன் பேரில், உயர்நீதிமன்ற உத்தரவுபடி கடந்த 17 ம் தேதி ரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது .

அப்போது வாக்கெடுப்பு காலதாமதாக நடைபெறுவதாக ஆணையரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட உமா மகேஸ்வரி வாக்கு பெட்டியை கீழே தள்ளிவிட்டு வெளியேறினார்.

அரசு பணியை செய்ய விடாமல் தடுத்ததாக கூறி ஆணையர் அளித்த புகாரில் உமா மகேஸ்வரி மற்றும் அவரது ஆதரவாளர் விஜயகுமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

newstamil.tv