SLM Land mosadi
SLM Land mosadi

குறைந்த விலையில் நிலம் வாங்கித் தருவதாகக் கூறி மோசடி

விசாரணை நடத்திய போலீசார் ராஜமாணிக்கம், பச்சமுத்து ஆகிய இருவர் மீது எட்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
Published on: 

சேலத்தில் குறைந்த விலையில் நிலம் வாங்கித் தருவதாகக் கூறி இரண்டரை கோடி ரூபாய் மோசடி செய்த இருவரை போலீசார் கைது செய்தனர். சங்ககிரி பகுதியை சேர்ந்த கந்தசாமி என்பவரிடம் குறைந்த விலைக்கு நிலத்தை வாங்கித் தருவதாகக் கூறி இருவர் போலி ஆவணங்களை தயார் செய்து, நில உரிமையாளரின் கையெழுத்தை போலியாக போட்டு பணத்தை பெற்று நிலத்தை கிரையம் செய்து கொடுக்காமல் ஏமாற்றியுள்ளனர். புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் ராஜமாணிக்கம், பச்சமுத்து ஆகிய இருவர் மீது எட்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

newstamil.tv