today gas rate
today gas rate

வீட்டு உபயோக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு

வீட்டு உபயோக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்ந்தது.
Published on: 

வீட்டு உபயோக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலை 60 ரூபாய் உயர்ந்தது. பதினொரு மாதங்களுக்குப் பின், எண்ணெய் நிறுவனங்கள் விலையை உயர்த்தியது.

சென்னையில் விலை
சென்னையில், 14.2 கிலோ எடைகொண்ட சிலிண்டர் விலை 928 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை ஆனது. இதுவரை 868 ரூபாய் 50 காசுகளுக்கு விற்கப்பட்டு வந்த நிலையில் அறுபது ரூபாய் விலை அதிகரித்தது. 19 கிலோ எடைகொண்ட சிலிண்டர் விலை, 115 ரூபாய் உயர்ந்து 2 ஆயிரத்து 43 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை ஆனது.


விலை உயரும் அபாயம்  
வர்த்தக பயன்பாட்டு சிலிண்டர் விலை அதிகரித்துள்ளதால், தேநீர் கடைகள், ஓட்டல்களில் தின்பண்டங்கள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகப்படுத்த சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. வீடுகளுக்கு எரிவாயு தொடர்ந்து கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் என, அறிவுறுத்தி உள்ளது.

இன்று மார்ச் 07 முதல்...
இன்று மார்ச் 7, 2026 முதல், இந்தியாவில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் 14.2 கிலோவின் விலை ரூ.60 உயர்ந்துள்ளது. இந்த உயர்வால் சென்னையில் வீட்டு சிலிண்டர் விலை ரூ.928.50 ஆக அதிகரித்தது. 19 கிலோ வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.114.50க்கு மேல் உயர்ந்து, சென்னையில் ரூ.1,900க்கும் மேல் விற்பனை ஆனது.

* வீட்டு உபயோக சிலிண்டர் 14.2 kg - விலை ரூ.60 உயர்வு

* வணிக பயன்பாட்டு சிலிண்டர் 19 kg - விலை ரூ.111 முதல் ரூ.115 வரை உயர்வு

* சென்னை விலை - வீட்டு சிலிண்டர் ரூ.928.50, வணிக சிலிண்டர் ரூ.1,900க்கு மேல்

* சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு.

கடந்த மார்ச் 1ஆம் தேதி, வர்த்தக சிலிண்டர் விலையில் ஏற்பட்ட சிறிய உயர்வைத் தொடர்ந்து, இன்று மார்ச் 7ஆம் தேதி நுகர்வோர்களுக்கு, இந்த விலை உயர்வு அதிர்வை தந்துள்ளது.

newstamil.tv