Tilparapu Falls
Tilparapu Falls

திற்பரப்பு அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்

திற்பரப்பு அருவியில் தடுப்புகளை தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது
Published on: 

கன்னியாகுமரியில், தொடரும் மழை காரணமாக, கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, திற்பரப்பு அருவியில் தடுப்புகளை தாண்டி, தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து விநாடிக்கு 500 கன அடி நீர் திறக்கப்படுவதால், கோதையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை இரண்டாவது நாளாக தொடர்கிறது. தடுப்பு வேலி அமைத்து, சுற்றுலா பயணிகளை குளிக்க விடாமல், போலீசார் மற்றும் பேருராட்சி ஊழியர்கள் கண்காணித்து வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. மலையோர பகுதிகளில் கன மழை பெய்து வருவதால், 48 அடி மொத்த கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை அபாய அளவான 44.51 அடியை தாண்டியதால், 500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

newstamil.tv