TRY Tasma protest
TRY Tasma protest

மது பாட்டில்களை திரும்ப பெற ஊழியர்கள் வேண்டும்

நாளை முதல் திருச்சி மாவட்டத்தில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்த நிலையில், ஊழியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு
Published on: 

மது பாட்டில்களை திரும்ப பெற தனியாக ஊழியர்களை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள டாஸ்மாக் பணியாளர்கள், திருச்சி மண்டல மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு படி தமிழகத்தில் சில மாவட்டங்களிலுள்ள டாஸ்மாக் கடைகளில் பாட்டிலை திரும்ப பெற்று 10 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே நாளை முதல் திருச்சி மாவட்டத்தில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்த நிலையில், ஊழியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

newstamil.tv