Thiruvarur
மாவட்ட செய்திகள்
அரசு பேருந்தில் கொண்டுச்செல்லப்பட்ட ஹவலா பணம் பறிமுதல்... ரூ. 20 லட்சம் ஹவாலா பணத்தை பறிமுதல் செய்த போலீசார்
திருவாரூரிலிருந்து, மயிலாடுதுறைக்கு அரசு பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட 20 லட்சம் ரூபாய் ஹவாலா பணத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
திருவாரூரிலிருந்து, மயிலாடுதுறைக்கு அரசு பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட 20 லட்சம் ரூபாய் ஹவாலா பணத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் கீரனூர் சோதனை சாவடியில், பேரளம் போலீசார் வெளி மாநில மது பாட்டில்கள் கடத்தி வரப்படுகிறதா என வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை நோக்கி வந்த அரசு பேருந்தை சோதனை செய்த போது பயணி ஒருவரின் பையில் கட்டு கட்டாக 20 லட்சம் ரூபாய் பணம் இருந்தது.
அவற்றை பறிமுதல் செய்து விசாரணை செய்ததில் அவர் தஞ்சாவூரை சேர்ந்த முகமது யூனுஸ் என்பதும் திருவாரூரை சேர்ந்த ஒருவரிடம் பணத்தை பெற்று வேறொருவரிடம் ஒப்படைக்க இருந்ததும் தெரியவந்தது.
