viral
நெல்லை மாவட்டம், அகஸ்தியர் அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் ஆக்ரோஷமாக கொட்டுகிறது. தொடர் கனமழையால், முக்கிய அணைகளான காரையாறு, சேர்வலாறு அணைகள் முழு கொள்ளளவை எட்டி வருவதையடுத்து, பாதுகாப்பு கருதி 12 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதன் காரணமாக, அகஸ்தியர் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, குளிக்கவும் அருவி அருகே செல்லவும் விதிக்கப்பட்ட தடை 2 வது நாளாக தடை தொடர்கிறது.
