தென்காசியில் பல்வேறு பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை

ஏராளமான ஐயப்ப பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிய நிலையில், மெயின் அருவியை தொடர்ந்து ஐந்தருவியிலும் குளிக்கத் தடை
THI KUTRALAM
THI KUTRALAM
Published on: 

தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெளுத்து வாங்கும் கனமழையால் குற்றால அருவிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் நான்காவது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள பல்வேறு நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. இதனால் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிய நிலையில், மெயின் அருவியை தொடர்ந்து ஐந்தருவியிலும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

newstamil.tv