15
மாவட்ட செய்திகள்
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை.. குற்றாலம் பிரதான அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையால், குற்றாலம் பிரதான அருவியில் நீர்வரத்து அதிகரித்து தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையால், குற்றாலம் பிரதான அருவியில் நீர்வரத்து அதிகரித்து தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
இதனால் பாதுகாப்பு கருதி ச அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த 2 நாட்களாக அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலும் நீண்ட நேரத்துக்கு கனமழை நீடித்தது.
இதனால் அதிகாலை முதல் குற்றாலம் பிரதான அருவியில் நீர்வரத்து அதிகரித்தது.

