கொடைக்கானலில் போதைக் காளான் புழக்கம் அதிகரிப்பு?

கொடைக்கானலில், போதைக் காளான் பயன்பாடு குறித்து போலீசார் நடவடிக்கை எடுக்க பொது மக்கள் கோரிக்கை.
drug mushroom
drug mushroom
Published on: 

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள், போதை காளான் பயன்படுத்துவது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்படும் நிலையில், காவல்துறையினர் சோதனை செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், கூக்கால், கவுஞ்சி உள்ளிட்ட பகுதிகள், சுற்றுலா பயணிகளை அதிகம் கவரும் நிலையில், இங்கு வரும் இளம் வயதினரை குறிவைத்து போதை காளான் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
கொடைக்கானல் பகுதியில் சுற்றுலா பயணிகள் போதை காளானில் தேன் மற்றும் ஜாம் கலந்து சாப்பிடுவது போல் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வீடியோ வெளியாகி வருகிறது.
இதுபோன்று, சமூக வலைதளங்களில் பதிவிடுவதால், போதை காளான்களை தேடி, பல இளைஞர்கள் கொடைக்கானல் மலை கிராமத்திற்கு செல்லக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.
போதை காளான் விற்பனை செய்யும் நபர்கள் மற்றும் பயன்படுத்தும் இளைஞர்களை கண்டறிந்து மாவட்ட கண்காணிப்பாளர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து வருகிறது.

newstamil.tv