SLM Sucide attack
மாவட்ட செய்திகள்
வங்கி செயலாளர் தொந்தரவு கொடுத்ததாக தகவல்
கேஷியர் மற்றும் நகை மதிப்பீட்டாளர் பணிகளை கூடுதலாக செய்ய சொன்னதாக கூறப்படுகிறது.
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கூட்டுறவு வங்கி பெண் ஊழியர் தற்கொலைக்கு முயற்சித்த நிலையில், அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வங்கி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். 2 ஆண்டுகளுக்கு முன் பணியில் சேர்ந்த பெண் ஊழியரை, வங்கி செயலாளர் கமலசேகர் மாலை 6 மணியிலிருந்து இரவு 9 மணி வரை கேஷியர் மற்றும் நகை மதிப்பீட்டாளர் பணிகளை கூடுதலாக செய்ய சொன்னதாக கூறப்படுகிறது. தன்னிடம் இணக்கமாக இருக்கவும் வேண்டும் என அவர் வற்புறுத்தியதால் மனமுடைந்து விஷம் குடித்த பெண் ஊழியர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
