Congress issue
மாவட்ட செய்திகள்
காங்கிரஸ் மாவட்ட தலைவர் தேர்வுக்கான நேர்காணல்
அவரது ஆதரவாளர்கள் குமரன் அடுத்த மாவட்ட தலைவர் என கோஷங்கள் எழுப்பிய போது, மூத்த நிர்வாகிகள் இடையே மோதல் ஏற்பட்டது.
கும்பகோணத்தில், காங்கிரஸ் நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் நாற்காலிகளை வீசி தாக்கி கொண்டனர். தஞ்சை வடக்கு மாவட்டத்திற்கு புதிய தலைவர் தேர்வு செய்வது தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மேலிட பொறுப்பாளர் நரேஷ்குமார் தலைமையில் நேர்காணல் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த குமரன் என்பவர் மாவட்ட தலைவர் பொறுப்பிற்கு மனு தாக்கல் செய்தார். அப்போது, அவரது ஆதரவாளர்கள் குமரன் அடுத்த மாவட்ட தலைவர் என கோஷங்கள் எழுப்பிய போது, மூத்த நிர்வாகிகள் இடையே மோதல் ஏற்பட்டது.
