

நிதி நிறுவனங்கள் மோசடி செய்தால் மட்டுமே விசாரணை செய்ய வேண்டும் என விசாரணை அமைப்புகள் நினைப்பது தவறு என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி தெரிவித்தார்.
நியோமேக்ஸ் நிறுவன மோசடி வழக்கில் நிறுவனத்தின் கிளை நிறுவனங்களின் சொத்துக்களை இணைக்க உத்தரவிட கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையின் போது நீதிபதி இதனை தெரிவித்தார்.
நியோமேக்ஸ் மோசடியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை 10 சதவீத நிதி கூட பாதிக்கப்பட்டவர்களுக்கு திருப்பி கொடுக்கவில்லை என்பது வேதனை அளிப்பதாக கூறினார். மனுதாரர்கள் கூறும் சொத்துக்கள் நிறுவனத்திற்கு தொடர்புடையதா, இல்லையா? என்பதை ஆராயாமல், வழக்கு உள்நோக்கம் கொண்டது என கூறுவது திருப்தி அளிப்பதாக இல்லை என்று தெரிவித்தார். .