Yercode fog
Yercode fog

ஏற்காட்டில் நிலவும் கடும் குளிர், பனிமூட்டம்

படகு இல்லத்திலும் படகுகளை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டதால் சேவை நிறுத்தப்பட்டது.
Published on: 

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நிலவும் கடும் பனிமூட்டம் மற்றும் இடைவிடாத சாரல் மழை காரணமாக படகு சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர். வார விடுமுறை தினத்தை ஒட்டி ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஏற்காட்டிற்கு வருகை தந்த நிலையில், கடும் பனிமூட்டத்தால் காட்சிமுனை, பூங்காக்கள் உள்ளிட்டவற்றை சுற்றி பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டது. படகு இல்லத்திலும் படகுகளை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டதால் சேவை நிறுத்தப்பட்டது.

newstamil.tv