ttv
மாவட்ட செய்திகள்
திமுக கூட்டணியை வீழ்த்துவது கடினம் - டிடிவி தினகரன்
"தவெக தலைமையிலான கூட்டணி திமுகவுக்கு போட்டியாக இருக்கும்"
சட்டப்பேரவை தேர்தலில் திமுகவை வீழ்த்துவது கடினம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறினார். திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக கூட்டணி பலமாக இருப்பதால் அதனை வீழ்த்த நினைக்கும் எதிர்க்கட்சிகள் தங்களை சுய பரிசோதனை செய்ய வேண்டும் என்றார். தவெக தலைமையில் நல்ல கூட்டணி அமைந்தால் அது திமுகவிற்கு போட்டியாக அமையும் என்றும் கூறினார்.
