Sivagangai
மாவட்ட செய்திகள்
கலியுகமெய் அய்யனார் ஆலய விழாவை ஒட்டி ஜல்லிக்கட்டு... சீறிப்பாய்ந்த காளைகளை வீரத்துடன் அடக்கிய வீரர்கள்
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கிருங்காகோட்டையில், கலியுகமெய் அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கிருங்காகோட்டையில், கலியுகமெய் அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
அதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட காளைகளும், 300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.
சீறிபாய்ந்து வந்த காளைகளை, வீரர்கள் லாவகமாக தழுவி அடக்க முயன்றனர்.
