பாளையங்கோட்டை, நெல்லை
பாளையங்கோட்டை, நெல்லை

காளிப்பிறை கொட்டகை திடீரென தீப்பிடித்து எரிந்து விபத்து.. தசரா திருவிழாவிற்கு விரதமிருக்க அமைக்கப்பட்ட கொட்டகை

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில், குலசேகரப்பட்டினம் தசரா திருவிழாவிற்கு விரதம் மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்டிருந்த காளிப்பிறை கூரைக் கொட்டகை திடீரென தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது.
Published on: 

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில், குலசேகரப்பட்டினம் தசரா திருவிழாவிற்கு விரதம் மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்டிருந்த காளிப்பிறை கூரைக் கொட்டகை திடீரென தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது.

அதில் கொட்டகை முழுவதும் எரிந்து சாம்பலான நிலையில், அங்கு நிறுத்தப்பட்டிருந்த 9 இருசக்கர வாகனங்களும் தீக்கிரையாகின.

காளிப்பிறை கொட்டகையில் தங்கி விரதம் இருந்து வந்த பக்தர்கள், இன்று நடைபெறும் தசரா திருவிழாவிற்காக குலசேகரப்பட்டினத்திற்கு புறப்பட்டு சென்ற பின்னர் தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

newstamil.tv